அப்போதெல்லாம்
மனிதர்கள்
வாழ்ந்த காலம்.
மதம் இருந்ததா.?
இருந்தது.
எப்போதும்
சும்மாவே இருந்தது.
மனிதர்கள்
தான்
வாழ்ந்தார்கள்.
மதம்
அடையாளமாக
அடக்கமாகவே
எல்லோருக்குள்ளும்
ஒளிர்ந்தது.
ஞானிகள்
பண்டிதர்கள்
குருமார்கள்
அறிஞர்கள்
எங்கும் இருந்தனர்.
இறையை போதித்தனர்.
நலங்களைப் போற்றினர்.
சேர்ந்தே வாழ்ந்தனர்.
செழித்திருந்தது உலகம்.
#பேரர்கள் – ரோகித் பரிமேலழகன், சூர்யா பரிமேலழகன்.
பே.பரிமேலழகன்
May 25, 2020