யாருக்காக
தினமும் அதிகாலையிலேயே
விதம் விதமான
சப்தங்களை எழுப்பி
இந்தப் பறவைகள்
துயிலெழுப்புகின்றன..?
நாலு நாலரைக்கெல்லாம்
பறவையிசை
தொடங்கி விடுகின்றது.
எழு ஏழரை வரை நீடிக்கும்.
பிறகு
முன்காலை/மதியம்/அந்திமாலை
என்று
விதவிதமானோர் விதம்விதமாக
எழுப்பும் ஒலிகள்
அன்பா..
மகிழ்ச்சியா..
குடும்ப நிகழ்ச்சியா..
சண்டையா…என
நமக்கொன்றுமே புரிவதில்லை.
சிற்றங்சிறு காலை முதல்
சிங்கார அந்திமாலை வரை
பறவைகளின்
உயிர் சங்கீதத்தை கவனித்து ரசிப்பது
என் அன்றாட மகிழ்ச்சி.
அது போதாதா எனக்கு..?
இதை மீறிய பறவைகளின்
வாழ்க்கை பற்றிய சிந்தனைகள்..
எட்டி உள்ளே பார்க்க வேண்டாம் எனக்கு.
பே.பரிமேலழகன்
June 25, 2019