காதலென்று
கெறங்கிப் போன
பல பெயக்களோட
பண்டாரப் பெய
கதை
இதுதான்..
காதலித்தாள்
கையைத் தொட்டாள்.
எந்நேரமும்
மனசுக்குள்
சில்..வண்டாய்
சிறகடித்தாள்.
கொஞ்சம்
தொட்டுக்கக் கூட
அனுமதித்தாள்..
பரவசமாகி
பைத்தியமாகி
அவளே..
என்றலைய விட்டாள்.
மேலும்
வளரவொட்டாது
நறுக்..கென கத்தரித்து
ஒரு
சுக்கிலபட்ச
நன்னாளில்
நாலாமத்த ஊர்க்காரனுக்கு
முந்தி விரிக்க
முகூர்த்தமானாள்.
ஊரைவிட்டோடி
பசி முதல்
பல அவமானப்பட்டு
அந்நிய மாநிலத்தில்
வேலை கிடைத்தும்
ஒட்டாமல்
ஊர் திரும்பி
சீரழிந்த கதையை
இன்றுவரை
யாரிடமும்
இவனால்
முந்தி அவுக்க முடியவில்லை.
இன்னும்
கூடக் கொஞ்சம்
அப்போதே
தொட்டிருக்கலாம்..
அப்போதைய
மயக்கத்தில்
நிலவொளியில்
அவளும்
சம்மதித்திருப்பாள்
என்றே
தோனுதிந்த
எச்சிக்கல
இரப்பாளி நாய்க்கு.
கசந்த காதல்
கதைகளே
தேசமெங்கும்..
என
கூவ நினைத்து
குரல்வளைக்குள்ளேயே
குரலை அமுக்கிகிட்டான்.
பே.பரிமேலழகன்
December 01, 2020