மாமரத்தில்
கூடுகட்டி
மடி நெறைய முட்டைபோட்டு
பக்குவமா..பத்திரமா
அடைகாத்து
பொரிஞ்ச குஞ்சு
அஞ்சாறு.
அவை
அழகைப் பாக்க
வேணுமய்ய்யா
மனசு நூறு.
வீடுகெட்டி
வெள்ளாமை விதைவிதைச்சு
பாடுபட்டு அறுத்துகட்டி
பத்தாயம் கொட்டி நிறைக்க
ஒன்னுமில்லே
பறவைகள் வாழ்வினிலே.
அவைகள்
அன்னாடம்
இரைதேடி
அலகெல்லாம் அதை நிறைத்து
குஞ்சுகளுக்கு
போட்டிவுடும் பாசத்திலே
குருவி
மிஞ்சுதய்ய்யா
நம்மூட்டு ஆத்தாக்களை.
தேவைக்குத் தேடி
தினந்தினமும் உழைத்து
சொத்துசுகம் சேக்காத
பறவையைத்தான்
கூண்டுக்குள்ளே
அடைச்சு போட்டு
பாதுகாப்பா பாக்குறேன்..ன்னு
பகல்வேசம் போடுதாங்ஙெ
கொள்ளபேரு.!
ஹூம்
அடிமையாவே
வாழ்ந்துவரும்
அயோக்கிய சிகாமணிகளுக்கு..
இயற்கை..ன்னா புரியுமா..
பறவைகளின்
இயல்பு தான் தெரியுமா..?
பே.பரிமேலழகன்
June 29, 2020