இது நடக்கும்
அது நடக்கும்
இப்ப நடக்கும்
அப்ப நடக்கும்
என்ற
எந்த எதிர்பார்ப்பும் வேண்டாம்.
நடக்கிற படி நடக்கட்டும்.
நமக்குன்னு ஒன்னும்
தனியா நடக்கப் போறதில்லை.
நடக்காமலும் இருக்கப் போறதில்லை.
மனக்கதவை
சாத்தி வைப்போம்.
யோசனைகளை
ஒத்தி வைப்போம்.
நம் செயலாவது
யாதொன்றும் இல்லை.
இனித் தெய்வமே..
உன் செயலால் தான்.
பே.பரிமேலழகன்
June 05, 2020