ஊரைச்சுத்தி
குளங்களும் ஆறுகளும்
கால்வாய்களும் வாய்க்கால்களும் வயல்களும் தோப்புகளுமாய்
விவசாய சீதேவியை
மட்டுமே நம்பி
100% ஊர்மக்களும் வாழ்ந்த
அந்த வாழ்க்கையையும்
மனிதர்களையும் மாடுகளையும் இன்னைக்கும் மறக்கமுடியலை.
ஓரு ஏர் புடிக்க
சொல்லிக் கொடுத்த விதம்..
வரப்பு வாய்க்க வெட்ட..
ஈராய்ய்ங்ங பார் புடிக்க..
பாத்தி புடிக்க..
கமலை அடிக்க..களைவெட்ட..
அறுத்து அடிக்க..
பார வண்டி அடிக்க..
பனை தென்னைமரமேற..
வாமடை போட்டு தண்ணீ பாய்ச்ச..
மாடு மேய்க்கன்னு…
மாட்டைக் குளிப்பாட்ட..
வைக்கலு புடிங்கி வைக்க
மாட்டைத் தண்ணீ காட்ட..
தொழுவுல சாணி அள்ளி
எருக்குழியிலே சேக்க..
செமிச்ச சாணி உரத்தை
வண்டியேத்தி வயலுல சேத்து சிதற வுடன்னு…
அடேயப்பா..
எத்தனை எத்தனையோ
வாழ்க்கைக் கல்விகள் படிச்சோமே..
மறக்க முடியலையே..
சொல்லிக்குடுத்த
தாத்தா அம்மை அப்பன் ஆத்தா
மாமன் மச்சான்..ன்னு
யாரையுமே மறக்க முடியலையே.!
இந்த வேலைகளோடு
தொடர்புடைய
ஆயிரமாயிரம் ஊர்க்கதைகளை..
இனிமே
யாருகூட நினைவு கூற..!
பே.பரிமேலழகன்
May 25, 2020