காலம், காலன்.

by Parimelazhagan P
125 views

காலமே
காலங்காலமாய்
யாவுமாயிருந்து
யாவரையும்
யாவற்றையும்
தீர்மானித்து இயக்குகிறது.

காலத்தின்
கருவிகளே
இப்பிரகிருதியின்
படைக்கப்பட்ட
உயிர்களெல்லாம்.

காலம் வாழ்க.
காலன் வாழ்க.

பே.பரிமேலழகன்
December 01, 2018

You may also like