கடவுள் இருக்கிறார்
என
நம்பி வாழும் பலருக்கு
ஒருவேளை கடவுள் இல்லையோ..
எனும்படிக்கும்.,
கடவுள் இல்லவேயில்லை
என
உரக்கச் சொல்லி வாழும் சிலருக்கு
ஒருவேளை கடவுள்
இருக்கத்தான் செய்கிறாரோ..
எனும்படிக்கும்.,
மாறுபடும் அநுபவங்கள்
வாழ்க்கையின் வழிநெடுக
ஏற்படுவது என்ன விந்தையோ.!
#புரியாதவாழ்க்கை.
பே.பரிமேலழகன்
November 18, 2018