யாருமில்லா
தனிமை கேட்டேன்.
கிடைத்தது.
அடுத்தவேளை
பசித்த போது தான்
இன்னொருவர்
துணையை உணர்ந்தேன்.
தாயும் தாரமும்
அன்னபூரணிகள்.
அருகிலிருந்து
அன்பொழுக
அன்னமிடுபவர்கள்.
தனிமை கேட்ட
கடவுளிடம்
பசியை
மறக்க கேக்கவில்லை.
தத்துவங்களும்
தர்க்கங்களும்
வாய்கிழிய
பேச மட்டுமே.
பசியை வெல்வது
உணவு மட்டுந்தான்.
சரி சரி.
இனி
தனிமை வேண்டாம்.
ஏகாந்தம் தப்பு.
மோனம் மோசம்.
சோறு கண்ட இடம் சொர்க்கம்.
நிஜத்தில்
இது தானே நம் நிஜவாழ்க்கை..!!!
பே.பரிமேலழகன்
June 16, 2018