இரு கைகளையும்
பற்றி இறுக்கி
பொத்திவைத்துக் கொள்ள வேண்டும் போல இருக்கிறது
என் குழந்தைகளின் கைகளை.!
என்னைய்யா ..
பயமா இருக்கா.?
இல்லை.
இல்லைன்னா..
படபடப்பா இருக்கா.?
அப்பிடியும் இல்லை.
அதுவுமில்லாட்டி
சீக்காளியா நெனைக்கியளோ.?
ஹூஹூம்.
பின்னே,
ஏன்யா இப்பிடி சொல்லுதீய.?
தகிரியமான ஆளாச்சே நீரு.
ஆமா.
விருப்பமா இருக்கையா.
தூக்கி வளத்த
அந்தப் பிஞ்சு விரல்களோடு
என் விரல்களைச் சேத்துப் பொத்தி
அந்தக் கைகளின் சூட்டை விரும்பி அநுபவிக்கனுய்யா.
அந்தச் சூட்டிலே
என்னை நான் தரிசிக்கனும்.
என் ரத்த ஓட்டத்தைத் தொட்டு ரசிக்கனும்.
எத்தனை வளந்தா என்ன.?
என் அன்பு
என் ஜீவன்
அவர்கள் பிறந்தபோதிலிருந்தே
அவர்களோடு தானே பயணிக்கிறது.!!
வருவார்கள்கள்.!
ஆசையோடு காத்திருக்கிறேன்.
அதுவரை
அவர்கள் வளந்த நாட்களை
நினைவோடு அசை போடுவேன்.
பே.பரிமேலழகன்
December 04, 2017