மன்மத அழகு

by Parimelazhagan P
116 views
மயிலிறகு

உதிர்ந்தாலும் அழகு.
உடலிலிருந்து
விரிந்தாலும் அழகு.

மயிலிறகு
ஒரு மன்மத அழகு.

காதலி
நீ
உடனிருந்தாலும் அழகு.

ஊடிச் சென்று
ஒரு கோடியில்
நாணிக் கோணியிருத்தலும் அழகு.

மயிலிறகுச் சுகமாய்
உனைத் தடவி
மகிழ்தலும் கூடுதல் அழகே..!

பே.பரிமேலழகன்
May 14, 2016

You may also like