இந்த
இதமான மயிற்பீலியின்
தடவலுக்கா
கண்மூடி கிறங்குகிறேன்..?
ஒருபோதும் இல்லை.
என்
தொண்டைக்குழிக்குள்
திண்டாடுது உன் தீஞ்சுவை முத்தங்கள்.
இழுத்து அமுக்கி
கடித்து உறிஞ்சி கன்னம் விட்டு இறங்கி
அழுத்தமாய்
கழுத்தைக் கடித்துக் குதப்புவாயே..
சில பல நிமிடங்கள்..??
அந்த
ருசி வேண்டுமெனக்கு இப்போது..!
அங்கம் முழுக்க கூசி
என் வசத்தையிழந்து உன்னிடம் என்னை
முழுசாய் திறக்கும் முன் மந்திரம்
எச்சில் பரவிய உன் ஈரமுத்தங்கள் தாம்.
காமம் கடுத்தமானது.
காமத்தைக் கட்டுப்படுத்த
மெல்லிய..எதுவும் எடுபடாது.
கூடலின்
வெறியாட்டங்களே
காதலின்
கடித்துச் சாப்பிடும் வெற்றிக்கனிகள்.
பே.பரிமேலழகன்
June 08, 2018