தான் யாரென்று அறியாமலே
வான் தொடும் ஆசை வீண்.
தனிமையில் உன்னாளாய் அமர்ந்து
பாரபட்சம் இன்றி உன்னை அறியனும்.
எது முடியும், தெரியும், தேவை, ஆசை
என்ற தனக்கான அளவுகோலை
தானே அறிந்து அளந்தெடுக்கனும்.
பிறருக்காகவும் பிறர் சொல்லியும்
பெருமைக்காகவும் வீம்புக்காகவும்
பிறழ் காரியமாற்றுதல் பெருந்தவறு.
தனிமை இனிது. உனக்குள் பேசு.
தர்க்கம் செய்; மறுத்தும் பேசி யோசி.
உனக்காகவும் உரக்கப் பேசு. தெளிவுறு.
எல்லாம் தெளிந்து ஏற்படும் முடிவு
எல்லா வகையிலும் உனக்கானது.
உன்னால் விரைந்து முடிக்கக் கூடியது.
தன்னை நம்பி, தனக்குள் விவாதிக்க
தயங்கும் குணமே தோல்வியின் தோழன்.
உன்னை முடக்கும் முள்வேலி தடைகள்.
வெற்றி என்பது திறமைக்கும் தெளிவுக்கும்
அறிவுக்கும், அயராத கடின உழைப்புக்குமானது.
இதுவே தெய்வத்தால் ஆகாதெனினும் ஜெயிப்பது.
தன்னை அறிவது ஆன்மீகம்.
தன்னை உணர்வது நம்பிக்கை.
தன்னில் தெளிவது வெற்றிப்படி.
பே.பரிமேலழகன்
January 03, 2016