கனத்த மனசு

by Parimelazhagan P
109 views
கனத்த மனசு

மனசு லேசாகி
பறவைகள் போல
வானில் சிறகடித்துப்
பறக்க என்ன செய்யனும்?

மகிழ்ச்சியும் நிம்மதியும்
போதுமின்னா
அது நம்ம
மனசுக்குள்ளே தான்
இருக்குதுன்னு
ஏன் இந்த
புத்திக்கும் சிந்தனைக்கும்
உறைக்க மாட்டேங்குது?

பிறரைப் பார்த்து,
அவர்களோடு
ஒப்பிட்டு,பொறாமைபட்டு
இருக்கிறதை வுட்டுட்டு
பறக்கிறதுக்கு ஆசைப்பட்டு
பலதையும் சேர்க்க ஆசைப்பட்டு,
பஞ்சு போல
காத்துலபறந்த மனசை
பாறையைப் போல
இறுக வச்சுட்டோமோ?

ஆசையை குறைப்போம்;
தேவையைக் குறைப்போம்.

போதும் என்றிருப்போம்,
நியாயமாய் உதவுவோம்.

இருக்கிறதுக்குள்ளேயே
வாழ்க்கையை அமைப்போம்.

நல்லதா நமக்குத் தெரிவதை
பிறர்க்கும் செய்வோம்.

இப்ப பறக்கலாம் ..
இந்தப் பறவைகளையும் தாண்டி.

இப்ப கடக்கலாம்
இது போல இன்னும் ஏழு கடல்.

மனசுக்கு ‘போதும்’ங்கிற
ரெண்டு ரெக்கை கட்டியாச்சு.

உயர உயர பறக்கலாம்;
உம்மாச்சியையும் பாக்கலாம்.

பே.பரிமேலழகன்
January 10, 2016

You may also like