பாழும் இந்தக் கல்லுல
பகல் எல்லாம் குத்த வைச்சு
காத்திருந்த என் காதல் மச்சானே.!-அந்தக்
காலம் எங்கே ஓடிப் போச்சு மச்சானே.!

கதிரு அறுக்கும் காலத்திலே
பயிரு அறுக்கும் அருவா போல
உசிரு அறுக்கும் பிரியமுல்லா மச்சானே.!-நான்
உம்ம மேலே வச்சிருந்தேன் மச்சானே..!

காசு அவலம் பொட்டு வச்சி
கண்டாங்கி சேலை கெட்டி
ஊரைச் சுத்தி வருவேனே மச்சானே.!-உம்ம
ஒரு பார்வை போதுமைய்யா மச்சானே.!

காலம் எல்லாம் ஓடிப் போச்சு.
காதல் மனம் கூடி ஆச்சு.
காந்தம் போல ஒட்டி இருக்கேன் மச்சானே.!-ஒங்க
கட்டையோட வெந்து போனும் மச்சானே..!

மணக்க மணக்க வாழ்ந்தாச்சு.
மகராசன் உம்மோட உடம்போட, மனசோட,
மனைவி எனும் பந்தத்தால மச்சானே..!-நீ தான்
மறுபிறவிலேயும் மச்சானாகனும் மச்சானே..!

ஏறக்கெட்டி வைச்சுப்புட்ட நம்ம
எளங்காதல் சேட்டை எல்லாம்,
ஏழேழு சென்மத்துக்கும் மச்சானே..!-நெஞ்சுக்குள்ளே
ஏறி இறங்கி இனிச்சிருக்கும் மச்சானே.!

நீதானே எஞ்சாமி, நானுனக்கு நல்ல அம்பாள்,
கோவில் போல வாழ்ந்து புட்டோம் காதல் வாழ்க்கை.
கும்பிட்டு வணங்கி நிக்கேன் மச்சானே.!- நீ தான் நம்ம
குலம் விளங்க வாழ்த்த வேணும் மச்சானே..!

பே.பரிமேலழகன்
July 14, 2016

You may also like