போய்விட்டானாக்கும்..
நினைவுப் புழுதியைக்கிளப்பி விட்டுட்டு.
ஆளில்லாத பொட்டல் காட்டில்
சுக்குநாறி புற்கள் நடுவேயமர்ந்து
சேர்ந்திருந்த நாட்களை
எண்ணி எண்ணி காய்ந்து
“சுக்காய் போ”
என்று சொல்லி அவன்
தூரம் அகன்றானோ..தோழி..!
சுடுகிறதோ
அந்த நாட்களின் இன்பத்தை
நினைத்து வாட்டி
பிரிவுத்துயரால் எரித்து..எரித்து.!
வருவான்.
வந்தவுடன்..
கொதிக்கும் தேகத்தோடு
இறுக்கியணைத்து
இதழ்களில் முத்தி தீ மூட்டி
அவனை காமத்தால் எரித்து பின்
காதலாய் குளிர்வேன் நான்.
#சுட்டபடம்பழநிபாரதி.
பே.பரிமேலழகன்
June 25, 2019