எப்போதும்
“தன் தரிசனம்”
வெகு சிறப்பானது.
எப்போதாவது தான்
அந்தத் தரிசனம்
அர்த்தமுள்ளதாகி
நம்முள்..
நாம் விரும்பும் மாற்றத்தை
விதைக்கிறது.
மாற்றம் நிகழ்கிறது.
இதிலே
பிறரின் தூண்டுதல் என்பது
மீனின்
வாலைப் பிடித்திழுப்பதை போல.
“தன் தூண்டல்”
மீனின்
தலையை பிடித்து அமுக்குவது போல.
பிடிபடும் உறுதியும் வெற்றியும்
“தனக்குத்தானே” எனில்
நூறுசதம் வெற்றி நிச்சயம்.
பே.பரிமேலழகன்
November 29, 2018