காதல் ஊற்று

by Parimelazhagan P
155 views
காதல் ஊற்று

உன்னைப்
பார்க்க பார்க்க
மதி குறைந்து குறைந்து
உன்னுள் என்னை
உயிரோடு புதைக்கிறேனே..

பெண்ணே.!
உதிர்த்து விட்டுவிடு.
போதும்..போதும்..
உன் தயவில் இப்போதைக்கு
நான் பிழைத்துப் போகிறேன்.

மீண்டும் மீண்டும்
இழுத்து அணைத்து சொருகு..
உனக்குள் என்னை.
அநுபவித்து விட்டுப் போகிறேன்.

நான்..
என்னை உணர்ந்து
மூச்சுவிட இடைவெளி விட்டு விட்டு
என் தேகத்தை
உன் பசலையில் பிசைந்து
உன் தேகமெங்கும் அப்பு.

உடலெங்கும்
காதல் ஊற்று பெருகி வழிந்து
காமச்சகதியில் கட்டிப்புரளுவோம்.

பே.பரிமேலழகன்
November 30, 2018

You may also like