கருவிளை கண்கள்

by Parimelazhagan P
143 views

காந்தச்சுடராய்
கருவிளை கண்கள்..
கட்டிப் போடுதே
அவளின் அழகை.

கட்டியவனை
பொட்டிட்டு
காதலோடு
காத்திருக்கின்றன.

காதல் பார்வை
என்றாலும்
அது அவளின்
அவருக்கானது.

கற்புடை மாதரின்
கண்ணசைவில்
கசிந்து உருகும்
காளையர் மகிழ்சி.

பே.பரிமேலழகன்
May 08, 2018

You may also like