காய்ந்து பாளமாய் பிளந்து
கனத்து போச்சு எம் மனசு.
பூத்து புன்னகையாய் காத்திருந்தும்
நேத்து வரை வரக்காணோம் நேயரை.
நீ என் உலகமென எண்ணித்தான்
நீளுது ஒவ்வோர் நாளும் இங்கே.
காத்திருப்போர் பட்டியலில் கால்கடுக்க
காதலுக்குத் தவமிருக்கேன் நான்.
போதுமிந்த மன உடல் வாதை..
போகா.!
புறப்பட்டு வந்து என்னுள் நுழை.
பே.பரிமேலழகன்
December 08, 2017