உன்னை நானும்
என்னை நீயும்
ஒப்புக்கொள்வதில் தான் இருக்கிறது
நம் உறவின் பலம்.
ஒப்புக்காக
ஒட்டிடும் உறவுகள்
வேர் பலம் அற்றவை.
வேர்விட்டு பெருகாதவை அவை.
உதட்டில் மலர்ச்சியும்
உயர்த்தி வைத்த கைளும்
உரிமையை கூட்டிச் சொல்லும்
உவப்பான சமிக்ஞைகள்.
உடனழைத்து உறவைப் போற்றும் நிரந்தர மகிழ்ச்சிகள்.
எனக்கு
எனக்கான
எல்லா உறவுகளும் வேண்டும்.
என்னைத் தள்ளாத..
எள்ளி நகைக்காத ..
உறவுகளாகவும் வேண்டும்.
பே.பரிமேலழகன்
December 18, 2017