துல்லியம்

by Parimelazhagan P
146 views
துல்லியம்

பூமி விட்டு அண்டத்துக்குள்
புழுதியை கிளப்பிப் பாயும் புரவியாய்
புறப்பட்டு…

இலக்கடைந்து துல்லியமாய்த் தன்னை
நிலை நிறுத்துமிந்த விண்வெளி விண்கலம்…

ஓர்
மனித சாதனையின் அடையாளம்.

பூதமாய்த் தெரிந்து புள்ளியாய் மறைந்து
சாதனை படைக்கும் விஞ்ஞானச் சாகசம்.

வேதங்கள் விளம்பிய சூத்திரங்களின்
சாத்தியம் காணும் ஆவலில் பிறந்த..

மின்னிடும் இன்னுமோர் புது நட்சத்திரம்.
சொல்லிடும் வானியல் சூட்சுமச் சித்திரம்.

நம்
உயிருங்கூட உடலை விட்ட பின்
உய்ய்ய்..யென்று கிளம்பி
விண்ணையடையுமோர் விசித்திரம்.

ஆசைப் பட்ட மாத்திரத்தில்
ஆன்மா..
மீண்டும் பிறவி எடுக்கும் என்பததன் சரித்திரம்.

விஞ்ஞானத்திலும் ஆன்மீகத்திலும்
“துல்லியம்”
பிசகாத சூத்திரமே வெற்றிச் சூட்சுமம்.

இவ்விரண்டையும்
சமகாலத்தில் உணர்ந்து அநுபவிக்கும் உண்மையே
நிகழ்கால வாழ்க்கை நிமித்தங்களின் பெருமிதம்.

பே.பரிமேலழகன்
December 04, 2016

You may also like