எனக்கருள் செய்

by Parimelazhagan P
168 views

உன்னையே நினைத்து
உள்ளம் கசிந்துருகி
தன்னையே மறந்துருகும்
தவக்கோலம் எந்நாளோ..!

பிறவியின் பிறப்பறுக்க
பிரபஞ்ச சுகம் அறுக்க
இறைவிக்கு இடப்புறம் தந்த ஈசா.!
மறுக்காதே எனக்கருள் செய் லேசா..!

பே.பரிமேலழகன்
July 17, 2016

You may also like

Leave a Comment