தழல் குறையட்டும்.
கண்ணீர் வத்தட்டும்.
நினைவுகள் சுகமாகட்டும்.
எல்லாம்
நீயும் நானுமாய்
“நாமாகும்”
நாள் சீக்கிரமே
நிஜமாய் வந்து விடட்டும்.
சுகம்..சுபம்.
சுகம்..சுபமே என்றாகட்டும்.
அக்னி சாட்சியாய்,
வாயு சாட்சியாய்,
நீரின் சாட்சியாய்
நிலத்தின் சாட்சியாய்
வெட்டவெளியின் சாட்சியாய்
என்னைக் உன்
நெஞ்சாங்கூட்டில் அடை.
நிதம் என்னைச் சேர்.
இன்பத்தை
இனிக்க இனிக்கத்
தின்னக் கொடு.
திமிறி வளை.
அன்பையும்
இன்பத்தையும்
அமிர்த எச்சிலாய்
அங்கமெங்கும்
அநியாயத்துக்குத்
தடவி மகிழ்வூட்டு.
காத்திருக்கிறேன்..
எங்கணவா..!
கனவிலிருந்து மீட்டு
கணங்களை நிஜமாக்கு..
தவிப்பை நீர்த்து
மேனியெங்கும் சுகமாக்கு.
டும்..டும்..டும்..டும்..
பே.பரிமேலழகன்
May 13, 2016