இந்தத் தாய்மடி என்றாலே தனி சுகம் தான்.
இது போலும் உறவு இன்னொன்று இல்லை.
இது போலும் இயல்பும் எங்கினும் இல்லை.
சுமை அறியாத சொந்தமான சுகம் தாய்க்கு.
துயரம் உணராத முழு பாதுகாப்பு குட்டிக்கு.
அணைத்த கைக்குள் உறங்குது ஆத்தா பாசம்.
ஆடு தானே என்ற அலட்சியம் தோன்றவில்லை.
அண்டமெங்கும் காணும் அற்புதமான உறவு இது.
ஆண்டவன் படைப்பின் பிணைப்பு அதிசயம் இது.
தூங்கட்டும் குட்டி துள்ளியாடிய அசதி அலுப்பில்.
துணையிருக்கும் தாய் ஆடு தாய்ப்பாசக் களிப்பில்.
பச்சைப்புல் அருகிருந்தும் பசி இல்லை வயிற்றில்.
நாம் சற்றே தள்ளிப் போய் விடுவோம்..!
பே.பரிமேலழகன்
December 25, 2015