அழகு

by Parimelazhagan P
160 views
அழகு

முன்னும் பின்னும்
அழகோவியங்கள்.

அக்னிக் குழம்பாய்
மேலெழும் சூரியன்.

ஆடல் அணங்காய்
நடனமிடும் நங்கை.

இறைவன் படைப்பினில்
இரண்டுமே பரவசம்.

உதயமும் நடனமும்
உள்ளொளிப் பெருக்கி

சிவப்பும் உவப்புமாய்
சீர் பெருக்கிப் படரும்.

ஆனந்த அதிகாலையில்
பரமானந்த காட்சிகள்..ஆஹா.!

இருளும் நிசப்தமும்
விலகும் விசித்திரம்.

ஒளியும் சதங்கையும்
ஒளிரும் நாதமணியோசை.

மகிழ்ச்சியும் நிம்மதியும்
மனமகிழ் சூத்திரம்.

மயக்கும் இக்காட்சிகள்
மன்மத உன்னதம்.

இன்னும் வாழ்வோம்
இன்னும் ரசிப்போம்.

எல்லாம் அவன் அருள்.
ஏகமாய் சரண் புகுவோம்.

பே.பரிமேலழகன்
November 18, 2015

You may also like