ஆம்
வெட்கம்
போலும்
தோன்றும்
இந்த
நாணம்
புயலுக்கு
‘முன்’
தோன்றும்
அமைதி.
புடித்து
அமுக்க
புன்னகை
பூ..ப்போட்டு
கன்னி
விரித்த
காதல்
பொறி.
நீரு
பூத்த
நெருப்பு..
அவளுடல்..
ஊதினானோ..
உடன்
பற்றியெரிவான்..
அவளுடன்.
கமுக்கமான
கலவரம்.
காதலும்
காமமும்
நெருக்கிக்
கலக்கும்
நிலவரம்.
ரம்..ரம்..ரம்.
பே.பரிமேலழகன்
May 03, 2020