வெளிப்படுத்துங்கள்!

by Parimelazhagan P
113 views
வெளிப்படுத்துங்கள்

உங்களில்
யாருக்கேனும்
யாரிடமாவது
“அன்பு”
இருக்குமானால்…

தயவுசெய்து வெளிப்படுத்துங்கள்.
அருமையாக வெளிப்படுத்துங்கள்.
உரிமையோடு வெளிப்படுத்துங்கள்.
கண்டிப்பாக வெளிப்படுத்துங்கள்.
வெளிப்படையாக வெளிப்படுத்துங்கள்.

காற்றுக் கூடப் புகாமல்
கணமான பூட்டு போட்டு
காந்தலில் “மூட்டம்” போட…

அன்பு ஒன்றும்
கதலி வாழைக்காய் இல்லை.

பொத்தி மூடி
புதைகுழிக்குள் மறைத்து வைக்க..

அன்பு ஒன்றும்
களவாடிய கடும் பொருள் இல்லை.

இருக்கு..ஆனா..இல்லை..
என்பது போல்,
ஒளித்து விளையாட…

அன்பு ஒன்றும்
கண்ணாம்பூச்சி விளையாட்டு இல்லை.

நெறைய இருக்கு உள்ளே,
ஆனா..
கடைசி வரை
காட்ட சந்தர்ப்பம் வரல்லை என்று சொல்ல…

அன்பு ஒன்றும்
பைத்தியாரத்தனம் இல்லை.

வெளிக்காட்டும் விளக்கு..அன்பு.
நெருக்கமாக்கும் பசை… அன்பு.
நேர்மையின் சின்னம்…அன்பு.

அன்பு செய்வோம்..
யாவருக்கும்..
எங்கெங்கும்..
என்றென்றும்.

“அன்பு வாழ்க!”

பே.பரிமேலழகன்
March 04, 2016

You may also like