அவனுக்காகவே
அவள் என்று ஆகிப் போனாள்.
இப்போது
அவள் வழி
அவன் வழி என்றாகி
எல்லாமே
அவனாகி அவனோடவே ஒன்றிப் போனது.
துன்பந்தான்.
கூடுதல் துன்பம் அவளுக்குத்தான்.
அவள் தான்
அவனைத் தவிர வேறெதாகவும் இல்லையே.
பலகால குட்டையில்
படிந்து விட்ட பாசியாய்
பசலையில் செழித்து
பாடாய்ப் படுகிறாள் அவனில்லாமல்.
கார் கிழித்து கூறாப்பாய்
கூதலாகிப் போன கருமேகமே..!
நார் கிழித்த உடலாகி நலிந்த என்னை
நேர் கிடத்த அவன் நேரம் நெருங்கி விட்டதோ..சொல்..!
பே.பரிமேலழகன்
November 24, 2016