அகண்டு
பெருக்கெடுத்து வெள்ளமாய்
ஓடுகிறாள்
தாய் தாமிரபரணி. !
யாருக்கெல்லாம்
தெரியனும்..
அவளின் இருகரை அகலம்..
இப்போ பாத்துக்கோங்க ..
அதிகாரிகளே.!
அப்புறம் அளந்துக்கோங்க.!
ஆக்கிரமிப்புக்களை
அவளால் முடிஞ்ச அளவு
அகற்றித் தந்திடுவாள்.
வராதே..என் எல்லைக்குள்
என்று
வெள்ளத்தைக்காட்டி
மரண பயமூட்டி
எச்சரிக்கை செய்திடுவாள்.
இருந்தாலும்
திருந்தமாட்டார்..
இயற்கையை அழித்திடுவோர்..
ஊர் சொத்தைக் கொள்ளையடிப்போர்.
ஆனந்த தாமிரபரணி
வாழ்க..வாழ்கவே. !
பே.பரிமேலழகன்
December 01, 2019