வெள்ளாடுவோம்!

by Parimelazhagan P
125 views
வெள்ளாடுவோம்

ஆத்தா
விட்டுட்டு போன
கஞ்சிப்பானைக்கு
அடிச்சுது யோகம்.

பிஞ்சுப்பிள்ளை
கோமதிக்கு
விளையாட்டு புத்தி ஜாஸ்தி.
கூடவே
கருணையும்
உயிர்களிடத்து அன்பும்.

பாருங்களேன்
கோழிக்கும் தனக்கும்
பரிமாறும் அழகை.!

அளுக்கொரு தட்டு..
பாத்துக்கோ கோழிப்பிள்ளே.!
உனக்கொரு அரையாப்பை
சோறு.
எனக்கு கொஞ்சம் கூட..
அரையே அரைக்காலு ஆப்பை..
சோறு..செரியா..!

அக்கா வயிறு
சித்த பெருசில்லா புள்ளை.!

தட்டைச்சுத்தி
சிந்தாம
அலகால அளைஞ்சு அளைஞ்சி
கொட்டி குலமழிக்காம
நல்லபுள்ளையா தின்னுட்டு போட்டி..
என்னைப் போல
பொட்டைக் கோழி..!

அக்கா எனக்கு
நேத்துவச்ச புளிக்கறிய
இன்னைக்கும்
சுண்ட கொதிக்கவச்ச
சுண்டக்கறி புளிக்கறி.,
தொடுகறி.
தொடுகறி இருந்தாத்தானே
இந்த
கோமாத்தாளுக்கு
பழைய கஞ்சி
தொண்டக்குழிக்குள்ளே
இறங்கும்..ங்ஙேன்.

வாவா
ரெண்டுபேரும் தின்போம்.
ரெண்டுபேரும் வெள்ளாடுவோம்.!

பே.பரிமேலழகன்
June 07, 2019

You may also like