அடையாளம்

by Parimelazhagan P
153 views
பரிமேலழகன்

எப்போதைய நான்..”நான்”.

நான் பார்த்த வேலையிலிருந்து ஓய்வுபெற்று ஐந்து வருடங்களாகிறது.

ஏறக்குறைய 37 வருட வாழ்க்கை அது.

இப்போது அந்த வாழ்க்கையை மறக்க விரும்புகிறேன்.

வேலைபார்த்த கம்பெனியின் பேரைச்சொல்லி என்னை அடையாளப் படுத்தியதையும் மறக்க முயற்சிக்கிறேன்.

ஏனெனில் இப்போதுள்ள “நான்”..அப்போதிருந்த “நான்” அல்ல என்று உறுதியாக நம்புகிறேன்.பிறகு ஏன் எனக்கு “ஓய்வு பெற்றுவிட்ட” அந்த அடையாளம்..?

கிராமத்தில் ‘இன்னார் மகன்/மகள்’ என்று அழைக்கிறார்கள்.பிறந்ததிலிருந்து சாகும் வரைக்கும் அப்படி அழைப்பதில் ஒரு உண்மை இருக்கிறது.நியாயம் இருக்கிறது.

அதைப்போல வேலையை வைத்து அடையாளப்படுத்துவது தவறு எனத் தோன்றுகிறது. காரணம் ஒருவர் பல வேலைகளில்..பல கம்பெனிகளில் பணிபுரியும் வாய்ப்பு இருப்பதால்..ஏன் ஒரு வேலையை அல்லது ஒரு கம்பெனியின் பெயரால் அழைக்கப்பட வேண்டும்.?அந்த வாழ்க்கையும் ஓய்வு பெற்றவுடன் முடிந்து விடுகிறதே.ஓய்வுக்குப் பின் நம் தினப்படி வாழ்க்கையும் முற்றிலும் மாறி விடுகிறதே.!

பே.பரிமேலழகன்
July 24, 2018

You may also like