வணக்கம் நண்பர்களே.!
நாம் அன்றாடம் உண்ணும் உணவில் சேர்க்கும்
அரிசி
பல்வேறு தானியங்கள்
காய்கறிகள்
பழங்கள்
எண்ணெய்கள்
குடிக்கும் தண்ணீர்
போன்ற வாழ்வதற்குத் தேவையான அத்தனைப் பொருட்களிலும் பல்வேறுபட்ட சத்துக்களையும் ருசியையும் வைத்துப் படைத்துள்ள இறைவன் மகா பெரிய சக்தி வாய்த்தவன் தானே.!
நமக்கான இந்த அரிதான மானுடப் பிறவியை அளித்து.,
நம் தாய் தந்தை சுற்றங்கள்..ஊர்..உறவுகளையும் தெரியக்காட்டி…
நாம் நன்றாக உண்டு வளருவதற்கும் எத்தனையோ பொருட்களையும் நம் கைக்கு எட்டும் தூரத்தில் இறைவன் படைத்துள்ள அதிசயத்தை எண்ணி எண்ணி வியக்கிறேன்.
இவைகளையெல்லாம் நாம் தான் செய்கிறோம் என்ற இறுமாப்பில் மாயையில் கட்டுண்ட நமக்கு இறைவனின் இருப்பும் பெருமையும் எங்ஙனம் விளங்கும்.?
எல்லா ஜீவராசிகளையும் படைத்து அவை அனைத்தும் வாழத் தேவையான எல்லாவற்றையும் அவைகளின் அருகிலேயே படைத்துள்ள இறைவனின் பாதார விந்தங்களை ஒரு சொட்டு அகங்காரம் கூட இல்லாமல் சாஷ்டாங்கமாய் விழுந்து “அனைத்தும் அவன் செயல்” என்று சரணடைவோம்.
சரணைடைதல் என்றால்.,
என் செயல் ஆவது இவ்வுலகில் யாதொன்றும் இல்லை; எல்லாம் உன் செயலே என்று தீர்க்கமாய் உணரப் பெற்றேன்.,தெய்வமே.!
என்னைக் காப்பாற்று என தெளிவதாகும்.
நம்மிலும் மேலான சக்தி நம்மைச் சுற்றியே சுழல்கிறது என்பதை அறிய அறிய நம் அகங்காரம் தானே விலகும்.
வாழ்க யாவரும்.!
பே.பரிமேலழகன்
October 28, 2017