மகிழ்ச்சி

by Parimelazhagan P
130 views
மகிழ்ச்சி

மகிழ்ச்சிக்கு
நேரமில்லை.
காலம் இல்லை.
இடம் பொருள் ஏவல் இல்லை.

மகிழ்ச்சிக்கு
இன்னின்ன
மற்ற தேவைகள்
என்று கூட இல்லை.

இங்கே
இயல்பாய்
இயற்கையாய்
“மகிழ்ச்சி”
மனம் போல விளைகிறதே!

ஆஹா.

பே.பரிமேலழகன்
April 19, 2016

You may also like