தலைமைப் பண்புகள்.

by Parimelazhagan P
130 views
விவேகானந்தர்

தலைமைப் பண்புகள் ரெடி.
இளைஞர்கள் தலைவராக ரெடியா?

தெளிந்த நல்லறிவு
திட நம்பிக்கை
தன் மேல் அன்பு.

மாசிலா அறம்
சேவைக்கு உறுதி
செயலாற்றும் பண்பு.

கடின உழைப்பு
நிதான சிந்தனை
தீயவை மறுப்பு.

தோழமை வளர்ப்பு
தானே உதாரணம்
நீதி,நேர்மை,தர்மம்.

கடமையில் கண்
காரியத்தில் வெற்றி
வெற்றியில் குறி.

இது போன்ற குணங்கள் தழைத்தால்
இந்திய இளைஞர்கள் எதிலும் வெல்வார்கள்.

தன் தேவை,நாட்டுத் தேவை சரியாய் தெரிந்து
தேவையை மட்டுமே செழிப்புறச் செய்வார்கள்.

அழுக்கான சமுதாய அங்கங்கள் யாவும்,யாரும்
பேணாமையாலே பெரிதாய் வீழ்ச்சியுறும்.

நிம்மதியும் பாதுகாப்பும் நிலைத்த பொருளாகும்.
ஆண்பெண் பேதமில்லா உழைப்பு பெரிய வரவாகும்.

சத்தியம்,உண்மை,தர்மம் தரத்துடன் விளங்கும்.
எல்லோரும் நல்லவரே என்ற விடியல் பிறக்கும்.

அப்போது அறமென்றால் அனைவருக்கும் புரியும்.
ஆக்கபூர்வ சுற்றுச் சூழலை இயற்கை பரிசளிக்கும்.

இவை யாவும் இந்திய இளைஞர்களுக்கானது.
பேணி வளர்ந்தால் இந்தியா இறைவனுக்கானது.

விவேகானந்தர் சிறந்த மகான் என்பது மட்டும் போதாது.
விவேகமாய் உழைத்து விவேகானந்தரை நெருங்கனும்.

பே.பரிமேலழகன்
November 29, 2015

You may also like